Author Topic: இன்ஸ்டன்ட் சில்லி சிக்கன்  (Read 489 times)

Offline kanmani


    சிக்கன்(boneless) - 12 துண்டுகள்
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சில்லி சிக்கன் மசாலா - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

 

 
   

சிக்கனை சுத்தம் செய்து கழுவி சின்னத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சிக்கனை சேர்க்கவும்.
   

அதில் இஞ்சி, பூண்டு விழுது, சில்லி சிக்கன் மசாலா, தேவையென்றால் உப்பு சேர்க்கவும்.
   

தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
   

கறியை நன்கு கிளறி விட்டு திருப்பி போட்டு திரும்பவும் மூடி வைக்கவும்.
   

சுவையான ஈஸி & இன்ஸ்டன்ட் காரசாரமான சில்லி சிக்கன் ரெடி. எண்ணெயிலிருந்து சிக்கனை எடுத்து தேவையென்றால் டிஸு பேப்பரில் வடிகட்டி பரிமாறலாம். எண்ணெயில் தங்கியுள்ள மசாலாவும் சுவையாக இருக்கும். நான் உபயோகபடுத்தியிருப்பது ஆச்சி சில்லி சிக்கன். இந்த சில்லி சிக்கன் சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.