Author Topic: ~ மைதாதயிர் போண்டா ~  (Read 491 times)

Offline MysteRy

~ மைதாதயிர் போண்டா ~
« on: October 16, 2013, 08:09:33 PM »
மைதாதயிர் போண்டா



தேவையானவை:
மைதா மாவு - 2 கப், புளித்த தயிர் - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் துண்டுகள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:
சீரகம், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உப்பு, சமையல் சோடா ஆகியவற்றை மைதா மாவுடன் கலந்து, புளித்த தயிரை சிறிது சிறிதாக விட்டு, போண்டா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.