Author Topic: ~ வெந்தயக் கீரை சிவப்பு அரிசி அடை ~  (Read 393 times)

Online MysteRy

வெந்தயக்  கீரை  சிவப்பு அரிசி அடை



தேவையானவை:
வெந்தயக் கீரை - 100 கிராம், சிவப்பு அரிசி - 200 கிராம்,  கடலைப் பருப்பு - 100 கிராம், உளுந்து - 50 கிராம், சீரகம், மஞ்சள் தூள் - தலா அரை டீ ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
 சிவப்பு அரிசி, கடலைப் பருப்பு, உளுந்து, சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு இளவறுப்பாக வறுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். வெந்தயக் கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, வெறும் வாணலியில் மஞ்சள் தூள் சேர்த்து சுட்டு எடுத்துக்கொள்ளவும். அரைத்துவைத்துள்ள மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து அடைமாவுப் பதத்திற்குக் கரைக்கவும். அதில் சுட்டுவைத்திருக்கும் கீரையையும் சேர்த்துக் கலக்கி, தோசைக் கல்லில் அடையாக வார்த்து எடுக்கவும்.
மருத்துவப் பயன்: இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் அதிகமாக உள்ளன. கீரையில் உள்ள வழவழப்புத்தன்மை, உடலில் உண்டாகும் புண்களை ஆற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். மலச் சிக்கல், மலத்துடன் சேர்ந்து ரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்னைகளைப் போக்கும். தொடர்ந்து சாப்பிட்டுவர வெண்புள்ளி மற்றும் சர்க்கரை நோய்கள் கட்டுப்படும்.