Author Topic: ~ 30 வகை ரெஸ்டாரன்ட் ரெசிபி ~  (Read 2884 times)

Online MysteRy

Re: ~ 30 வகை ரெஸ்டாரன்ட் ரெசிபி ~
« Reply #30 on: October 10, 2013, 02:23:04 PM »
ஸ்வீட் அண்ட் சோர் சூப்



தேவையானவை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பீன்ஸ்  - தலா ஒன்று, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - கால் கப், கிராம்பு - 2,  பிரிஞ்சி இலை - ஒன்று, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கவும். குக்கரில் வெண்ணெயை உருக்கி... கிராம்பு, பிரிஞ்சி இலையை வதக்கி, நறுக்கிய காய்களை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கவும். பின்பு கிராம்பு, பிரிஞ்சி இலையை நீக்கிவிட்டு மிக்ஸியில் அரைத்து... உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், பால் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.