Author Topic: ~ திருவாரூர்' கடப்பா ~  (Read 442 times)

Online MysteRy

~ திருவாரூர்' கடப்பா ~
« on: October 09, 2013, 02:29:08 PM »
திருவாரூர்' கடப்பா


தேவையானவை:
பயத்தம்பருப்பு - 100 கிராம் (வேக வைத்துக் கொள்ளுங்கள்), பொட்டுக்கடலை (வறுகடலை, உடைத்த கடலை) - 50 கிராம், சோம்பு - 25 கிராம், பட்டை - 10 கிராம், கசகசா - 20 கிராம், வனஸ்பதி - 50 கிராம், சின்ன வெங்காயம் - 200 கிராம், தக்காளி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், பூண்டு - 50 கிராம், இஞ்சி - 25 கிராம், கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை - தலா 2, தேங்காய் - ஒரு மூடி, கேரட் - 2 (வட்டமாக ஸ்லைஸ் செய்து கொள்ளவும்), நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா (சேர்த்து) - ஒரு கைப்பிடி அளவு. எலுமிச்சம்பழம் - ஒன்று, உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்துக் கொள்ளவும்), உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு வதக்கிக்கொள்ளுங்கள். இதனு டன் கசகசா, தேங்காய், 10 கிராம் சோம்பு, 30 கிராம் பூண்டு, 25 கிராம் இஞ்சி சேர்த்து ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் பட்டை, சோம்பு, பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி, வனஸ்பதி முழுவதையும் ஊற்றுங்கள். சூடா னதும் கிராம்பு, ஏலக்காய், அன் னாசி பூ, ப¤ரிஞ்சி இலையுடன், இடித்து வைத்துள்ள பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து வதக்குங் கள். நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங் கள். அரை லிட்டருக்கு மேலாக தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், கேரட் ஸ்லைஸ், அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். கொதித்து வரும்போது, வேக வைத்த பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மறுபடியும் கொதிக்கவிடுங்கள். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும்... கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலைகளைத் தூவி, எலுமிச்சைச் சாறு விட்டு இறக்கவும். பின்பு, வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து குழம்பில் தூவி, கரண்டியால் கலக்கிவிடுங்கள்.
இட்லி, தோசைக்கு ஏற்ற வித்தியாசமான குழம்பு இது.