Author Topic: ஸ்வீட் பெசரெட்  (Read 496 times)

Offline kanmani

ஸ்வீட் பெசரெட்
« on: October 05, 2013, 07:24:59 PM »
என்னென்ன தேவை?

பாசிப்பயறு, கருப்பு உளுந்து,
சம்பா கோதுமை - தலா 1 கப்,
வெல்லப்பாகு - 1 கப்,
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?

பாசிப்பயறு, உளுந்து, சம்பா கோதுமையை நன்கு கழுவிக் காய வைத்து, வெறும் கடாயில் தனித்தனியே லேசாக வறுத்து, மெஷினில் கொடுத்து  மாவாக அரைத்துக் கொள்ளவும். அதில் வெல்லப்பாகு விட்டு, தேவையான அளவு தண்ணீர், ஏலக்காய் தூள் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக்  கரைத்து, தோசையாக வார்க்க வேண்டியதுதான். டயட் செய்கிறவர்களுக்கு எண்ணெய் கூடத் தேவையில்லை. குழந்தைகளுக்குக் கொடுப்பதானால்  நெய் விட்டுக் கொடுக்கலாம்.