Author Topic: ~ சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்--காய்கறிகளின் மருத்துவ குணங்களும் :- ~  (Read 572 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226408
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்--காய்கறிகளின் மருத்துவ குணங்களும் :-



சில காய்கறிகளின் பயன்களும், பக்கவிளைவுகளும்--காய்கறிகளின் மருத்துவ குணங்களும் :-

வாழைக்காய்

என்ன இருக்கு:-
கொழுப்புச் சத்து, விட்டமின் இ.

யாருக்கு நல்லது:-
வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும்

யாருக்கு வேண்டாம்:-
வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

பலன்கள்:-
உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.


வெள்ளரிக்காய்

என்ன இருக்கு:-
விட்டமின் ஏ, பொட்டாசியம்

யாருக்கு நல்லது:-
சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்

யாருக்கு வேண்டாம்:-
ஆஸ்துமா நோயாளிகளுக்கு

பலன்கள்:-
உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்.


சுண்டைக்காய

என்ன இருக்கு:-
விட்டமின் சி

யாருக்கு நல்லது :-
சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்

பலன்கள்:-
கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும்.


பலாக்காய்

என்ன இருக்கு :-
சுண்ணாம்புச்சத்து

யாருக்கு வேண்டாம் :-
வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு

பலன்கள் :-
செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை
நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும்.


பப்பாளிக்காய்

என்ன இருக்கு :-
விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம்.

யாருக்கு நல்லது :-
மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும்

யாருக்கு வேண்டாம் :-
கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

பலன்கள் :

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

களாக்காய்

என்ன இருக்கு :-
விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது :-
மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த
மயக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் :-
தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள் :-
கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும்.