Author Topic: கருப்பட்டி பணியாரம்  (Read 575 times)

Offline kanmani

கருப்பட்டி பணியாரம்
« on: October 02, 2013, 10:29:52 PM »
என்னென்ன தேவை?

இட்லி மாவு - 1 கப்,
துருவிய கருப்பட்டி - அரை கப்,
தேங்காய் துருவல் அல்லது பல்,
பல்லாகக் கீறிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய் தூள் -அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

இட்லி மாவில் கருப்பட்டித் துருவல், நெய்யில் வதக்கிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியார அச்சில் சிறிது நெய்யோ,  எண்ணெயோ விட்டு, அதில் மாவை ஊற்றி, இரண்டு பக்கங்களும் வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.