தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பச்சரிசி மாவு, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, அதனை கலந்து வைத்துள்ள மைதா மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான மைதா தோசை ரெடி!!! இதனை மிளகாய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.