மட்டன் (கொத்தியது) - கால் கிலோ
தேங்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10
பொட்டுக்கடலை - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சோம்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
மட்டனை சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிக்கட்டி வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
மட்டனுடன் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, பொட்டுக்கடலை, இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து ஒன்றாக கலந்து மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ கெட்டியாக அரைத்தெடுக்கவும். (மிக்ஸியில் அரைக்கும் போது நீர்த்துவிடுமென நினைத்தால் பொட்டுக்கடலைத் தவிர மற்ற அனைத்தையும் அரைத்துக் கொண்டு, பொட்டுக்கடலையைப் பொடித்து சேர்த்தால் ஈரத்தன்மை சரியாகிவிடும்).
பிறகு அரைத்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.