Author Topic: ~ முளைகட்டிய வெந்தய குழம்பு ~  (Read 556 times)

Offline MysteRy

முளைகட்டிய வெந்தய குழம்பு




தேவையானவை:
முளைகட்டிய வெந்தயம் - அரை கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், தக்காளி  2, பூண்டு பல் - கால் கப், புளி - சிறு எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன், வெல்லத்தூள், தனியாத் தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

அரைப்பதற்கு:
தேங்காய் துருவல் - அரை கப், சோம்பு அல்லது சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், பூண்டு - 3 பல்.

தாளிப்பதற்கு:
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கறிவடகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பவற்றைத் தாளித்து, முளைகட்டிய வெந்தயம் சேர்த்து வாசனை வர வதக்கவும். பிறகு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள்,    மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு புரட்டு புரட்டி... புளிக் கரை சல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அரைத்து வைத்திருக் கும் தேங்காய் விழுது சேர்த்து, தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் இறக்கி... வெல்லத்தூள், கறிவேப்பிலை போட்டுக் கலக்கவும்.
இந்தக் குழம்பின் சுவையும், மணம் அபாரமாக இருக்கும். சின்ன வெங்காயமும், வெந்தயமும் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடியவை.