புளிப்பான ஆப்பிள் - ஒன்று
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
சீனி - அரை கப்
வெண்ணெய் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து கிளறவும்.
அதனுடன் கேசரி பவுடர், உப்பு மற்றும் சீனி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து நீர் வற்றும் வரை வேகவிட்டு இறக்கவும். (ஆப்பிள் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்).
சுவையான ஆப்பிள் பச்சடி தயார். ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.