என்னென்ன தேவை?
வெங்காயம் - 1,
வெள்ளரிக்காய் - 1 பெரியது,
பெங்களூர் தக்காளி(புளிப்பு இல்லாதது) - 2,
கேரட், முள்ளங்கி - தலா 1 பெரியது,
கொத்த மல்லி - பொடித்தது சிறிதளவு,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
ரோஸ் செய்ய ஒரு சிறு தக்காளி.
எப்படிச் செய்வது?
தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், முள்ளங்கி, கேரட் இவற்றை அழகாக வட்டமாக வெட்டி ஒரு பிளேட்டில் அலங்கரிப்பதுதான் முக்கியம். முதல் வட்டத்தில் முள்ளங்கி, பின் கேரட், வெங்காயம், தக்காளி அதனைச் சுற்றி வெள்ளரி என்று அலங்கரித்து பொடித்த கொத்தமல்லி மேலாக தூவி குளிர வைத்து, ஜில்லென்று பரிமாறும்போதுதான் உப்பு, மிளகுத் தூள் தூவவும். பார்ட்டி சாலட் அலங்கரிப்பதில்தான் அழகு. படத்தில் காணலாம். நடுவில் சிறிய தக்காளியை ரோஜா மாதிரி வெட்டி வைக்கலாம்.