என்னென்ன தேவை?
காய்ந்த பட்டாணி - 2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
மிளகு (வறுத்துப் பொடித்தது) - டீஸ்பூன்,
சீரகம் - 1 லு டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது, தேங்காய்,
மாங்காய் - துருவியது, கடுகு - சிறிது.
எப்படிச் செய்வது?
காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பின் வடித்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கரகரப்பாக வறுத்து பொடித்த சீரகம், மிளகு, தேங்காய், மாங்காய் தூவி, தேவைப்பட்டால் உப்பு சேர்த்துப் படைக்கவும்.