Author Topic: அன்னபூர்ணா சாம்பார்  (Read 488 times)

Offline kanmani

அன்னபூர்ணா சாம்பார்
« on: September 28, 2013, 12:35:52 AM »
என்னென்ன தேவை?

கால் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்த துவரம்பருப்பு - இரண்டு கப்
முருங்கைக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2 (ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டியது)
சின்ன வெங்காயம் - கால் கப்
தக்காளி - பொடியாக நறுக்கியது கால் கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
புளி - ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு
அன்னபூர்ணா சாம்பார் பவுடர் அல்லது
சாதாரண சாம்பார் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - சிறிது
உப்பு - தேவையான அளவு.

அரைக்க...

சின்ன வெங்காயம் - அரை கப்
தக்காளி - ஒன்று
தேங்காய் - கால் கப்
பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - ஒரு சிட்டிகை
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 2 (கீறியது).
எப்படிச் செய்வது?

புளியை நீர்க்க கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  முருங்கைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீரும் தக்காளியும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். அரைத்த விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் புளித்தண்ணீரும் பருப்பும் வெல்லமும்  பெருங்காயமும் சேர்க்கவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம்,  மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் தாளித்து சாம்பாரில் கலக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சூடாக இட்லி, தோசை அல்லது வடையுடன்  பரிமாறவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை?

அன்னபூர்ணா சாம்பாரில் முக்கியமானது அவர்களின் சாம்பார் பொடி. வறுத்து அரைக்கும் சாம்பார் பொடி சுவையை மாற்றிவிடும். அதனால்  சாதாரணமான சாம்பார் பொடியே போதுமானது. அதிக நேரம் கொதிக்க விட்டால் முருங்கைக்காய் கரைந்துவிடும். பருப்பு அதிகம் வெந்து குழையாமல் முழுதாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் துவரம்பருப்புடன் சிறிது மைசூர் பருப்பு சேர்க்கலாம்.