Author Topic: ஃப்ரூட்ஸ் அடை  (Read 448 times)

Offline kanmani

ஃப்ரூட்ஸ் அடை
« on: September 26, 2013, 11:29:44 PM »
தேவையானவை: அரிசி – ஒரு கப், உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், அன்னாசி – ஒரு கப், திராட்சைப்பழம் – ஒரு கப், கடலைப்பருப்பு – 100 கிராம். உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, உளுந்தைத் தனித் தனியாக ஊற வைத்துக் கழுவிக் கொள்ளவும். மூன்றையும் ஒன்றாக்கி அரைத்துக் கொள்ளவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து, நறுக்கிய ஆப்பிள், அன்னாசியையும் திராட்சையையும் சேர்த்துக் கலக்கவும். இதை தோசைக்கல்லில் அடை களாக வார்த்து, சிறிது எண்ணெயை இருபுறமும் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்க… வாசனையான ஃப்ரூட்ஸ் அடை தயார்.

குறிப்பு: அடை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். சத்துகள் நிரம்பிய லைட்டான டிபன்