உன்னிடம் புரிய முயன்று
தோற்றுத் தான் போனேன்
நீ புரியும் நிலை விட்டு
என்றோ கடந்துவிட்டாய்
வெற்றுக் கொஞ்சல்கள்
இன்று சுகம் தான்
வேற்று மனங்களுக்கு
அது ரணம் தான்
உன் மழலை பேச்சும்
ரணத்திற்கு மருந்தானது
இதற்கும் ஓர் நாள் முடிவு வரும்
உன் உள்ளம் அன்றே எனை தேடி வரும்
உனக்காக என்றும் காத்திருப்பேன்
உண்மை காதலை உணர்த்திடுவேன்
ஆம் உண்மையை அன்றே உணர்ந்திடுவாய்...................என்றும் அன்புடன் அருள்