உன் கரம் பிடிக்க ஆசைப்பட்டு
உன் சினம் தாழ்ந்து போனேனடி
நீ பேசிய வார்த்தைகெல்லாம்
மறு பேச்சு பேசாமலே
மெளனம் காத்து இருந்தேனடி
காலன் வந்து அழைத்தாலும்
காத்திருப்பேன் என்றாயே
நான் கரம் பிடிக்க காத்திருக்க
எவன் கரம் பற்றி சென்றாயோ
ஏன் என்னை கொன்றாயோ
முடியாது என்றிருந்தால்
ஒதுங்கி தான் போயிருப்பேன்
என்ன வென்று சொல்லாமலே
எங்கே சென்று போனாளோ
என்ன தான் ஆனாளோ
எதுவுமே தெரியாமல் என்னை கொன்று கொண்டு இருக்கின்றேன்.....................