Author Topic: ஒட்டிப் பிறக்க வைத்தான்...  (Read 1359 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


ஒன்றாய் பிறந்தோம்
ஒன்றாய் வளர்ந்தோம்
ஏனோ இறைவன் நம்மை
ஒட்டிப் பிறக்க வைத்தான்...
ஒரு நிமிடம் கூட பிரியவில்லை
என்னை நீயும்
உன்னை நானும்
சுமந்தே சுற்றி வந்தோம்

பார்ப்போர்க்கு எல்லாம்
வியப்பு..பரிதாபம்...
எனக்கு நீ ஆறுதலாய்
உனக்கு நான் ஆறுதலாய்...
மனம் உடைந்து போன
நாட்கள் எல்லாம்
கணக்கில் அடங்காதவை.....

எல்லோரையும் ஏக்கமாக
நாம் பார்த்தோம்
அவர்களைப் போல
வாழ நம்மால் முடியாதா என்று....

உன்னை பிரிய நானும்
என்னை பிரிய நீயும்
நினைக்கவில்லை
சுகமாய்
சந்தோஷமாய் இருக்கையில்
என்னுள் மட்டும் எப்படி வந்தது
இந்த காதல் உணர்வு.....

என்னையும் காதலித்த மனதை
என்னவென்று சொல்ல....
அவருடன் நான் சேர
உன்னை பிரிய வேண்டுமே...
இதை நினைக்கையில் மனம்
துடிக்குது....

இன்று முதல் முறையாக
இறைவனை பழிக்கிறேன்
என்ன குற்றம் செய்தோம்...
கண்ணீரோடு கதறுகிறேன்...

நம்மை பிரிக்க நாட்கள்
குறித்தாயிற்று...
இருவருமே பிழைப்போமோ
இருவருமே மரிப்போமோ
தெரியவில்லை...

எனக்காக உயிரைக் கொடுக்க
நீ துணிந்து விட்டாய்...
உன்னை இழக்க என்னால்
முடியவில்லை....
ஒருவராவது சந்தோஷமாக
வாழ்ந்தால் போதும்....
நரக வாழ்க்கை போதும்
என்ற முடிவில் நீ......
முற்றுப்புள்ளியாய் போய் விடுமோ
நம் வாழ்க்கை என்ற தவிப்பில் நான்........

முதன்முதலாய் பிரிய போகிறோம்
அது உடலால் மட்டுமே இருக்கட்டும்.....
மரணம் கூட நம்மை பிரிக்காது..
வாழ்வை தேடி நம்பிக்கையோடு
வாழ்வோம் என்ற நம்பிக்கையில்
செல்வோம்...வா...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline gab

Re: ஒட்டிப் பிறக்க வைத்தான்...
« Reply #1 on: November 12, 2011, 11:32:35 PM »
nice kavithai  shruthi (F)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ஒட்டிப் பிறக்க வைத்தான்...
« Reply #2 on: November 13, 2011, 06:14:13 AM »
Quote
முதன்முதலாய் பிரிய போகிறோம்
அது உடலால் மட்டுமே இருக்கட்டும்.....
மரணம் கூட நம்மை பிரிக்காது..
வாழ்வை தேடி நம்பிக்கையோடு
வாழ்வோம் என்ற நம்பிக்கையில்
செல்வோம்...வா...


nice kavithai  ;)