என்னென்ன தேவை?
ஆப்பிள் - 2,
பால் - அரை கப்,
வெனிலா ஐஸ்கிரீம் - 1 ஸ்கூப்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
பட்டைத்தூள் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ஆப்பிளை தோல் நீக்கி நறுக்கவும். ஆப்பிள், பால், ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து, மிருதுவான கலவையாக அடிக்கவும். அதை ஒரு டம்ளரில் ஊற்றி, மேலே பட்டைத்தூள் தூவிப் பரிமாறவும்.