Author Topic: ~ நாவில் சுவையூறும் புளிச்சக்கீரை ஊறுகாய்! ~  (Read 496 times)

Offline MysteRy

நாவில் சுவையூறும் புளிச்சக்கீரை ஊறுகாய்!


தேவையான பொருட்கள்:
புளிச்சக்கீரை - 1 கட்டு, கடுகு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க:
காய்ந்த மிளகாய் 150 கிராம், தனியா 3 டேபிள்ஸ்பூன், சீரகம் 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டேபிள்ஸ்பூன்.

பதப்படுத்த / பாதுகாக்க:
வினிகர் 5 - டேபிள்ஸ்பூன், சோடியம் பென்சாய்டு - கால் டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
முதலில்... வறுக்கக் கொடுத்தவற்றை தனித்தனியே வறுத்து, பொடி செய்துகொள்ள வேண்டும். அடுத்து, புளிச்சக்கீரையைச் சுத்தமாக கழுவி, தண்ணீரை வடிக்க வேண்டும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கீரையை அதில் சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பிறகு, தயாராக இருக்கும் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றைக் கீரையுடன் சேர்த்துக் கிளற வேண்டும். வேறொரு கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு மற்றும் பெருங்காயம் தாளிக்க வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கி, பிறகு, கீரைக் கலவையையும் சேர்த்து, பத்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். எண்ணெய் தனியே பிரிந்து வரும்நிலையில், வினிகர் மற்றும் சோடியம் பென்சாய்டு பவுடர் சேர்த்தால்... புளிச்சக்கீரை ஊறுகாய் ரெடி. உலர்ந்த, சுத்தமான பாட்டிலில் சேமித்தால் 4 முதல் 5 மாதம் வரை கெடாமல் பாதுகாப்பாக இருக்கும்.