Author Topic: ~ சோயா கிரானுல்ஸ் டைமண்ட் ஸ்வீட் ~  (Read 390 times)

Offline MysteRy

சோயா கிரானுல்ஸ் டைமண்ட் ஸ்வீட்



தேவையானவை:
சோயா கிரானுல்ஸ், பீட்ரூட் துருவல், கேரட் துருவல் - தலா ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், , சர்க்கரை - 2 கப், பால் - அரை கப், நெய் - தேவையான அளவு, நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி துண்டுகள் - 8.


செய்முறை:

பீட்ரூட் துருவல், கேரட் துருவலுடன் கால் கப் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சோயா கிரானுல்ஸை வெந்நீரில் 3 நிமிடம் போட்டு வைத்திருந்து, பிறகு நீரை வடித்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, பிழிந்து, கால் கப் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு, காய்ந்ததும் கோதுமை மாவு சேர்த்து (அடுப்பை 'சிம்’மில் வைத்து) பொன்னிறமாக வறுக்கவும். அரைத்த பீட்ரூட் -  கேரட் விழுது, சோயா கிரானுல்ஸ் விழுது ஆகியவற்றை வறுத்த கோதுமை மாவில் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு, வாணலியில் ஒட்டாமல் வரும் வரை நன்கு கிளறி இறக்கவும். இந்தக் கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, பரவலாக்கி, சற்று ஆறியதும் டைமண்ட் வடிவத்தில் 'கட்’ செய்து, மேலே வறுத்த முந்திரியை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

சுவையில் அசத்தும் இந்த ஸ்வீட், குட்டீஸ்களை கவர்ந்து இழுக்கும்.
« Last Edit: September 21, 2013, 02:19:52 PM by MysteRy »