Author Topic: ~ சேப்பங்கிழங்கு மசாலா வறுவல்: ~  (Read 504 times)

Offline MysteRy

சேப்பங்கிழங்கு மசாலா வறுவல்:



தேவையானவை:
தேவையானவை:
சேப்பங்கிழங்கு.......................1/2 கிலோ
மிளகாய்ப் பொடி.................1 தேக்கரண்டி.
தேங்காய் துருவியது ....... 2. தேக்கரண்டி.
சீரகம்.......................................1தேக்கரண்டி.
எண்ணெய்........................... 100 மில்லி
சின்ன வெங்காயம்..............5
உப்பு...........................................தேவையாள அளவு.
கறிவேப்பிலை


செய்முறை:
சேப்பன்கிழன்கை குக்கரில் போட்டு வேகவைத்து விடவும்.
அதன் தோலை உரிக்கவும். கிழங்கை நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்.

தேங்காய், சீரகம், வெங்காயம் போட்டு நீர் விடாமல் பரபரவென்று அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கிய கிழங்கைப் போட்டு நன்றாக சிவந்து வரும்வரை பொறித்து எடுக்கவும்.

பின்கடாயை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் வறுத்த கிழங்கு, கறிவேப்பிலை அரைத்த தேங்காய மசாலா +உப்பு போட்டு பிரட்டி சிறு தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.

பின் நன்றாக சிவந்ததும் இறக்கவும்.
சேப்பங்கிழங்கு மசால் வறுவல் சும்மா மொறு மொறுன்னு செம கலக்கலா இருக்கும். செய்து பாருங்களேன். சேப்பங்கிழங்கு வழ வழ கொழ கொழன்னு இருக்குன்னு சொல்றவங்க கூட நாலு துண்டு எச்சா சாபிடுவாங்க.