நாம் பேசும் நேரங்கள்
குறைந்து போனதால்
நம் பாசமும் குறைந்து போகுமோ ?
எனக்கு நானே
என்னை சமாதான படுத்தி
கொள்கிறேன் ...
என்னிடம் இருக்கும் ஏக்கம்
உனக்கும் இருக்கும்
என்று என்னை
நானே தேற்றி கொள்கிறேன்
நேரங்கள் குறைந்து போனதற்கு
நீ காரணமா
நான் காரணமா
ஆராய்ச்சியில் இறங்கி
விடுகிறது
என் அறிவு ஜீவியான மூளை
உன்னை கண்ட நாள் முதல்
அது மழுங்கி போனது தெரியாமல்...
என் மனம் மட்டுமே
உனக்காய் போராடுகிறது
அவன் பேசவில்லை
என்றாலும்
உன் நினைவுகள்
அவனை வட்டம் இடும் என்றும்
உலக அழகியே அவன்
முன் வந்தாலும்
என்றுமே அவன் அழகியாக
நீ மட்டுமே ...
தன்னையே மறந்து போகும்
சூழ்நிலை வந்தாலும்
உன்னை மறக்காமல்
அவனுக்குள் இருக்கும்
உன் இதயம் துடித்து
கொண்டே இருக்கும்
உனக்கே உனக்காக ..
ஏனோ
வேலை என்று வந்து விட்டால்
நீ இரண்டாம் பட்சம் தான்
இப்பொது என் மனம்
என் மழுங்கிய மூளையிடம்
தோற்று கொண்டிருக்கிறது
என்னவனே வந்து விடு
என் தோல்வியை
வெற்றியாகா மாற்ற.....