கடலை மாவு - 150 கிராம்
நாட்டுத் தக்காளி - 6
பெருங்காயம் - கால் டேபிள்ஸ்பூன்
பூண்டு - 5 பல்
குறுமிளகு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பொரி - 100 கிராம்
எழுமிச்சைப்பழம் - 1
பச்சைமிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி - 1 கொத்து.
எப்படி செய்வது?
பூண்டு, குறுமிளகை அரைத்து கடலைமாவில் சேர்த்து, அதில் பெருங்காயத்தையும் உப்பையும் கலந்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை நன்கு கழுவி இந்த மாவில் போட்டுக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவோடு சேர்த்து தக்காளியை போட்டு வேகவைத்து எடுங்கள். இன்னொரு பாத்திரத்தில் பொரியைக் கொட்டி, வெங்காயம், பச்சை மிளகாயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி பொரியில் போட்டு எலுமிச்சைப்பழத்தைப் பிழித்து விட்டு, கொத்தமல்லியை வெட்டிப் போட்டு நன்கு பிசைந்து கொள்ளுங்கள். தக்காளி பஜ்ஜியை இரண்டாக வெட்டி நடுவில் இந்த பொரிக்கலவையை அள்ளி வைத்து பரிமாறுங்கள். வித்தியாசமான ஆந்திரா டொமட்டோ பஜ்ஜி ரெடி.