புகையிலை ஒரு தாவரம் தான்!!! ஆனால் அது மனித உயிரை அழிக்கும் நச்சுத் தாவரம்!!!
புகையிலையில் 'நிக்கோட்டின்' எனும் விஷத்தன்மை உள்ளது. சிகரெட், பீடி, முதலானவற்றைப் புகைக்கும்போது அது கார்பன்டை ஆக்ஸைடுடன் கலந்து புகைப்பவனுக்கு நுரையீரலில் புற்று நோயை தருகிறது. புகைக்காதவர் அவன் பக்கத்தில் இருந்தால் அவனுக்கும் புற்றுநோய் வருகிறது. அத்தனை கொடியது 'நிக்கோட்டின்' என்று கூரலாம்.
புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் 18 நிமிட மனித ஆயுளை குறைத்துவிடுகிறது!
ஒரு பூனையை சாகடிக்க ஒரு துளி நிக்கோட்டின் போதும்!
ஒரு நாயை சாகடிக்க இரண்டு துளி நிக்கோட்டின் போதும்!
புகையிலை, பீடி, சிகரெட், சுருட்டு போன்றவை புற்றுநோய் முதலான பல கொடும் நோய்களுக்கு காரணம்
உடலுக்கு நோய் தவிர எந்த ஊட்டமும் இதில் இல்லை
எனவே புகையிலை போடும் நபர்கள், பீடி, சிகரெட், சுருட்டு புகை பிடிக்கும் நபர்கள் இதை நிறுத்த முயற்சி பண்ணுங்கள்
ஆரோக்கியமான நமது உடலை புகையிலை, பீடி, சிகரெட், சுருட்டு இவைகள் மூலம் பல நோய்களை வரவழைத்து நமது ஆரோக்கியமான உடலுக்கு
கேடு விளைவிக்க வேண்டாம்.......
சிகரெட் நுனியில் நீங்கள் பற்றவைக்கும் தீ ,
நீங்கள் உங்களுக்கே வைத்துக்கொள்ளும் தீ
புகையிலை நமது உடலுக்கும், உயிருக்கும் கேடு ........
புகையிலை, புகைபிக்கும் பழக்கத்தை அடியோடு ஒழிப்போம்.......