Author Topic: சாதம் வடை  (Read 453 times)

Offline kanmani

சாதம் வடை
« on: September 10, 2013, 10:53:00 AM »
    சாதம் - 2 கப்
    ரவை - 1/2 கப்
    அரிசி - 1/4 கப்
    தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
    சிறிய வெங்காயம - 15(அல்லது)
    பெரிய வெங்காயம் - 2
    மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
    சோடா உப்பு - 1/2 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

 

    ஆறிய சாதத்தில் ரவையையும், சோடா உப்பு அளவில் பாதியையும் போட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். பிசைந்த கலவை கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
    ஒரு மூடி போட்டு இதை குறைந்தது எட்டிலிருந்து, பத்து மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்.
    வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
    ஒரு சிறிய வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
    அதிகம் வதக்க தேவயில்லை. உடனே தேங்காய் துருவலையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி வாசம் வந்ததும் இறக்கி விடவும். அதை மாவு கலவையில் சேர்க்கவும்.
    அரிசியை ரவை பதத்திற்கு மிக்ஸியில் பொடித்து அதையும் சேர்க்கவும்.
    தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேர பிசைந்து கொள்ளவும்.
    வாணலியில் என்ணெயை சூடு செய்து கொள்ளவும்.
    ஒரு பாலித்தீன் பேப்பரில் தண்ணீர் நனைத்து வைத்துக் கொண்டு, வடை போல் தட்டி சூடான எண்ணெயில் மெதுவாக போட்டு இரு பக்கமும் சிவக்க பொறித்து எடுக்கவும்

Note:

சாதம் விரையாக இல்லாமல் குழைய இருக்கவும். அல்லது தண்ணீர் ஊற்றிய சாதமாக இருந்தாலும் தண்ணீரை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளலாம்.

சாதம் வடைக்கு ஊரினால் தான் வடை சாஃப்ட்டாக இருக்கும்.இல்லையெறால் ஹார்டாக இருக்கும்.டேஸ்ட்டும் கம்மியாக இருக்கும்.
« Last Edit: September 10, 2013, 11:01:10 AM by kanmani »