கனமான தோசை - 3
கடலை மாவு - 1 கப்
மைதா மாவு - 1/2 கப்
பேக்கிங் பவுடர்(Baking powder) - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
ரெட் கலர் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
தோசைகளை வாழைக்காய் பஜ்ஜிக்கு வெட்டுவது போல நீள்ம்டாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், ரெட் கலர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சலித்து கொள்ளவும்.
பின் இத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
பிறகு வெட்டி வைத்துள்ள தோசை துண்டுகளை ஒவ்வொன்றாக கடலை மாவு கலவையில் பிரட்டி எடுத்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் போட்டு நன்றாக வெந்த பிறகு எடுக்கவும்.
இப்பொழுது சுவையான தோசை பஜ்ஜி ரெடி
இதனை சட்னி அல்லது சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Note:
தோசை மீந்து விட்டால் இப்படி பஜ்ஜி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். காய்களுக்கு பதில் செய்தாலும் யாரலும் கண்டுபிடிக்க முடியாது. மிகவும் வித்தியசமாக இருக்கும்.