என்னென்ன தேவை?
நேந்திரம் பழம் - 6,
வெல்லம் - 350 கிராம்,
தேங்காய் - 1,
நெய் - 100 கிராம் மற்றும் வறுப்பதற்கு சிறிது,
முந்திரி - 25 கிராம்,
சுக்கு - சிறிதளவு,
ஏலக்காய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
நேந்திரம் பழத்தை உரித்து இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சவும். தேங்காயைத் துருவி 2 தரத்தில் பால் எடுக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, அரைத்த பழத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு வெல்லப் பாகை ஊற்றிக் கிளறவும். பாகும் பழமும் கலந்து வாசனை வரும்போது இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றவும். வற்றி வரும் போது முதல்தர பாலை ஊற்றி ஏலக்காய் தூள், பொடித்த சுக்கு, முந்திரியைப் போட்டு இறக்கவும்.