அரிசி - ஒரு கப் (ரைஸ் குக்கர் கப்)
முட்டை - 4
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பிரியாணி மசாலா - 2 1/2 தேக்கரண்டி
தயிர் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
அரிசியை வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவிடவும். முட்டையுடன் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்து ஆம்லெட் போட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து கரையும் வரை நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பிரியாணி மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதனுடன் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும் வரை வேகவிடவும்.
பின் சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான ஆம்லெட் மசாலா ரைஸ் தயார்.