Author Topic: பீட்ரூட் சூப்  (Read 552 times)

Offline kanmani

பீட்ரூட் சூப்
« on: September 06, 2013, 04:41:41 AM »
தேவையானவை:

பீட்ரூட் துருவல் – ஒரு கப் , கேரட் துருவல் – அரை கப் , வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.


செய்முறை:

காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டி… உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் கிரீம் சேர்த்துப் பரிமாறலாம்.