தேவையானவை:
பாலக் கீரை – ஒரு கப், டோஃபு (சோயா பனீர்) – 100 கிராம், வெங்காயம் – ஒன்று, செலரி – சிறிதளவு, கோஸ் – 100 கிராம், நறுக்கிய இஞ்சி – பூண்டு – ஒரு டீஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் (அ) வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
காடாயில் எண்ணெய் (அ) வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி – பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும். இதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும். நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.