Author Topic: ஸ்வீட் கார்ன் சூப்  (Read 417 times)

Offline kanmani

ஸ்வீட் கார்ன் சூப்
« on: September 06, 2013, 04:35:52 AM »
தேவையானவை:

 காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், நறுக்கிய கேரட் – 2 டீஸ்பூன், கோஸ் – 50 கிராம், உதிர்த்த ஸ்வீட் கார்ன் – 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் – தலா 2 (நறுக்கிக் கொள்ளவும்), சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வினிகர் – அரை டீஸ்பூன், அஜினமோட்டோ – கால் டீஸ்பூன், வெங்காயத்தாள் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கடாயில் காய்கறி வேக வைத்த தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கொதிக்க விடவும், பாதி வெந்தவுடன்… உப்பு, மிளகுத்தூள், வினிகர், அஜினமோட்டோ சேர்த்து, சோள மாவை தண்ணீரில் கரைத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கெட்டியாக வரும்போது இறக்கி, கிண்ணத்தில் ஊற்றி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.