தேவையானவை:
காய்கறிகளின் தோல், காம்பு, தண்டு (கழுவிக் கொள்ளவும்), பேரிக்காய் தோல் – தேவையான அளவு, வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல், நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, வொயிட் சாஸ் – 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் வெண்ணெயை விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயதாள் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய காய்கறி தோல், தண்டு, இலை, பேரிக்காய் தோல்களை கழுவி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் வொயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி… கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.