தேவையானவை:
கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 50 கிராம், நறுக்கிய பூண்டு – இஞ்சி – 2 டீஸ்பூன், வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), செலரி – ஒன்று, புரூக்கோலி – சிறிதளவு, சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் ஆலிவ் ஆயில், கொத்தமல்லி தழை – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெயை காயவைத்து… நறுக்கிய பூண்டு – இஞ்சியை வதக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், செலரி, புரூக்கோலி சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சோள மா¬வை கரைத்து ஊற்றி கெட்டியாக்கி இறக்கி, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.