Author Topic: ஹாட் அண்ட் சோர் சூப்  (Read 680 times)

Offline kanmani

ஹாட் அண்ட் சோர் சூப்
« on: September 05, 2013, 09:53:34 PM »
தேவையானவை:

கேரட் – ஒன்று, பீன்ஸ் – 5, கோஸ் – 100 கிராம், வெங்காயம், பிரிஞ்சி இலை – தலா ஒன்று, வினிகர் – கால் கப், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 12, அஜினமோட்டோ – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

காய்ந்த மிளகாயில் பாதி அளவு எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியவுடன் சிறிதளவு வினிகர், கெட்சப் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மீதம் உள்ள மிளகாயை லேசாக வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடித்த மிளகாயை போட்டு அடுப்பை அணைத்து விடவும். ஒன்றன்பின் ஒன்றாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். இதில் மீதமுள்ள வினிகர், அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், காய்கறி தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ சேர்த்து கொதிக்க வைக்கவும்.

சோள மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்த்து கட்டி விழாமல் கொதிக்கவிடவும். இறக்கும்போது மறுபடியும் அரை டேபிள்ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி… மேலே கிரீம் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் ஒரு முட்டையை அடித்து கலக்கி இதில் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.