என்னென்ன தேவை?
மாதுளை - 2,
சாத்துக்குடி - 2,
ஐஸ் கட்டிகள் - தேவைக்கேற்ப.
சிரப் செய்ய...
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மாதுளையை முத்துகளாக உதிர்த்து, அதில் சிறிதளவை தனியே எடுத்து வைக்கவும். மீதியை நன்கு அரைத்து, விதைகள் இல்லாமல் வடிகட்டி, ஜூஸாக எடுக்கவும். சாத்துக்குடியையும் விதை நீக்கி, ஜூஸ் எடுக்கவும். சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைய விடவும். சர்க்கரை கரைந்து, கொப்புளங்கள் வரும்போது அடுப்பை அணைத்து ஆற விடவும். ஒரு தட்டில் 1 டீஸ்பூன் சர்க்கரை தூவவும். ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து, ஒரு சாத்துக்குடி சுளையினால் அதன் விளிம்புகளைத் தேய்த்து ஈரப்படுத்தவும். சர்க்கரை தூவிய தட்டின் மேல் டம்ளரை கவிழ்த்து, மெதுவாகச் சுழற்றவும். இப்படிச் சுழற்றித் திருப்பினால், கண்ணாடி டம்ளரின் விளிம்பில் படிகமாக உருவாகும். 2 பங்கு மாதுளை ஜூஸ் உடன், ஒரு பங்கு சாத்துக்குடி ஜூஸ் கலந்து, தேவைக்கேற்ப சர்க்கரை சிரப்பும் சேர்த்துக் கலக்கவும். தயாராக உள்ள டம்ளரில் அதை ஊற்றி, மேலே கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ் சேர்த்து, தனியே எடுத்து வைத்த மாதுளை முத்துகளை தூவிப் பரிமாறவும்.