தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 2 டீஸ்பூன்
கோடா மசாலா - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கோடா மசாலாவிற்கு...
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 5-6
கருப்பு ஏலக்காய் - 2
பட்டை - 2
மிளகு - 8-10
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கோடா மசாலாவிற்கு கொடுத்த பொருட்களைப் போட்டு, தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தம், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து, 2-3 நிமிடம் தாளிக்க வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பைப் போட்டு, நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து நாட்டுச்சர்க்கரை மற்றும் புளிச்சாறு ஊற்றி கிளறி, கொதிக்க விட வேண்டும்.
பிறகு 2 டீஸ்பூன் கோடா மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், மகாராஷ்டிரா ரெசிபியான அம்டி பாத் ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்