தேவையான பொருட்கள்:
காபி பவுடர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பால் - 1 கப்
சுடுநீர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லெட் பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் ஒரு கப்பில் காபி பவுடர் மற்றும் சர்க்கரையைப் போட்டு, சிறிது சுடுநீர் ஊற்றி, ஸ்பூன் கொண்டு பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் பாலை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை அந்த கப்பில் சற்று மேலே தூக்கி நுரை வருமாறு ஊற்ற வேண்டும்.
இறுதியில் அதில் சாக்லெட் பவுடர் தூவினால், சூப்பரான எஸ்பிரசோ காபி ரெடி!!! இதனை காலையில் குடித்தால், உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
l