தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு எ
ண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துருவிய தேங்காயை லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிளகு, சீரகம், மல்லி போன்றவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து விட்டு, மிக்ஸியில் அவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கிவிட்டு, வேக வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான கொண்டைக்கடலை குழம்பு ரெடி!!!
இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.