Author Topic: ~ கருச்சிதைவு இல்லாமல் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்! ~  (Read 490 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226403
  • Total likes: 28830
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கருச்சிதைவு இல்லாமல் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள்!




வேலைப்பளு, டென்ஷன், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, ஓய்வின்மை, தூக்கமின்மை போன்ற காரணங்களால் 20 சதவீதம் பேருக்கு கரு கலைந்து அபார்ஷன் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

ஒருமுறை அபார்ஷன் ஆனால், மறுமுறை கர்ப்பம் தரிக்கும் போது, 2வது முறையும் அபார்ஷன் ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே பெண்கள் இருக்கின்றனர்.

இவ்வாறு கருச்சிதைவு இல்லாமல் பாதுகாப்பாக சில வழிமுறைகள்.....

பெண்களின் கர்ப்ப காலத்தை 3 கட்டமாக பிரித்துக் கொள்ளலாம். முதல் வாரத்திலிருந்து 12 வாரம் வரை முதல் கட்டமாகவும், 13 முதல் 26வது வாரம் 2ம் கட்டமாகவும், 27 - 40வது வாரம் வரை 3ம் கட்டமாகவும் உள்ளது. இதில், முதல் கட்டத்தில் கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டத்தில்தான் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம், மரபணு குறைபாடு, குடும்பம், அலுவலக பிரச்னையால் மன அழுத்தம், உணவு பழக்க வழக்கம் மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையே. இத்தகைய காரணங்களால் இயற்கையான முறையில் மட்டுமில்லாமல் செயற்கை முறையில் கருத்தரிப்பவர்களுக்கும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அவ்வாறு கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்த முறை எந்த பிரச்னையுமின்றி குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமெனில், கருச்சிதைவு ஏற்பட்ட கருவை மரபணு சோதனைக்கு உட்படுத்தி, அதன் மூலம் பெற்றோருக்கு ஏதாவது குறை உள்ளதா அல்லது கருவில் பிரச்னையா என்பது கண்டறிந்து, அதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், 2வது முறையாக கருத்தரிக்கும் போது, அபார்ஷன் இல்லாமல் தடுக்க முடியும். 13 முதல் 26 வார கால கட்டத்தில் அபார்ஷன் வாய்ப்புகள் குறைவு. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சியை தெளிவாக அறிய முடியும்.

குழந்தைக்கு ஊனம், மனவளர்ச்சி குன்றுதல் போன்ற குறைபாடு இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 3வது காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய் இறுக்கமாக இருக்க வேண்டியது அவசியம். தற்போது பெண்கள் டூவீலர், சைக்கிள் ஓட்டுகின்றனர். அதிகளவில் மாடிப்படி ஏறுகின்றனர். இதனால், கர்ப்பப்பை வாய் போதிய அளவில் இறுக்கமாக இருப்பதில்லை. இப்படிப்பட்ட நிலையில், உடலில் சத்துக்கள் குன்றியவர்களுக்கு குறைபிரசவம், குழந்தை இறந்து பிறப்பது, குழந்தை போதிய அளவு சக்தி இல்லாமல் பிறந்தவுடன் இறப்பது போன்றவை நடக்க வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க, 3வது கால கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனைப்படி, கர்ப்பப்பை வாயில் தையல் போட்டுக் கொள்ளலாம். 10 மாதம் முழுமையானதும், பிரசவ காலம் வரும் போது, தையலை பிரித்து குழந்தையை வெளியில் எடுக்கலாம். இதன் மூலம் குறைபிரசவமும், குழந்தை இறந்து பிறப்பதும் தடுக்கப்படும்.