Author Topic: மடக்கு பணியாரம்  (Read 408 times)

Offline kanmani

மடக்கு பணியாரம்
« on: September 03, 2013, 11:53:43 PM »
என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு -1 கப்,
உளுந்து (வறுத்து பொடி செய்தது) - 1/4 கப்,
பாசிப் பருப்பு
(வறுத்து பொடி செய்தது) - 1/4 கப்,
வனஸ்பதி அல்லது வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - சிறிதளவு,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
மைதா - 1/4 கப், 
எண்ணெய் -பொரிப்பதற்கு.
சர்க்கரை பாகுக்கு...
சர்க்கரை - 1 கப்,
தண்ணீர் - சர்க்கரை மூழ்கும் அளவுக்கு.

எப்படிச் செய்வது? 

பச்சரிசி மாவு, உளுந்து, பாசிப்பருப்பு, வனஸ்பதி அல்லது வெண்ணெய், உப்பு, வெள்ளை எள் ஆகியவற்றைக் கலந்து மைதா சேர்த்து தண்ணீர் சிறிது,  சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். சிறிய உருண்டைகளாக செய்து, சப்பாத்தி கல்லில் சிறிய பூரிகளாக தேய்க்கவும். தேய்த்த பூரிகளை  சுருட்டி ஒவ்வொன்றாக சூடான எண்ணெயில் பொரிக்கவும்.பொன்னிறமாக பொரித்துத் தனியே வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு, அதன் மேல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். பாகு கொதித்து ஒரு கம்பிப்பதத்துக்கு வரும் வரை வைக்கவும்.  பாகுதயாரானதும், பொரித்து வைத்துள்ள சுருள்களைப் போட்டு எல்லா சுருள்கள் மீதும் பாகு படுமாறு பிரட்டவும்