காக்கரக்காய வேப்புடு
மாற்றம் செய்த நேரம்:8/26/2013 1:02:21 PMRemove the seeds of bitter gourd in the middle vakuntu. Half an hour after slightly rub salt in the interior, well washed and clean.
13:02:21
Monday
2013-08-26
Remove the seeds of bitter gourd in the middle vakuntu. Half an hour after slightly rub salt in the interior, well washed and clean.
Pearl Millet Dosa with Pineapple ch...
MORE VIDEOS
என்னென்ன தேவை?
மீடியம் சைஸ் பாகற்காய் - 5
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
புளி - சிறிய துண்டு
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 4 குழிக்கரண்டி
கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
எப்படி செய்வது?
பாகற்காயை நடுவில் வகுந்து விதைகளை அகற்றி விடுங்கள். உள்பகுதியில் லேசாக உப்பு தடவி அரைமணி நேரம் கழித்து நன்றாக கழுவி சுத்தம் செய்யுங்கள். கசப்பு நீங்கிவிடும். வெங்காயத்தை சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்து வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்குங்கள். வெங்காயம் பொன்னிறமானதும், புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றுங்கள்.
பின் கடலைமாவு, மிளகாய்த்தூளைப் போட்டு நன்றாக கிளறி, கொத்தமல்லித் தழையை போட்டு இறக்கி ஆறவைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை பாகற்காயின் உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டி விடுங்கள். வாணலியை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயை போட்டு வேகவையுங்கள். 15 நிமிடங்கள் வேக வேண்டும். 3 நிமிடத்துக்கு ஒருமுறை பாகற்காய்களை திருப்பி விடவேண்டும். பச்சைநிறம் மங்கி வெந்ததும் இறக்குங்கள். காக்கரக்காய வேப்புடு ரெடி.