Author Topic: பரங்கிப்பூ துவையல்  (Read 491 times)

Offline kanmani

பரங்கிப்பூ துவையல்
« on: August 24, 2013, 02:00:40 PM »

    பரங்கிப்பூ - 10
    உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி,
    கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி,
    தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி,
    காய்ந்த மிளகாய் - 4,
    கறிவேப்பிலை - சிறிது,
    புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
    கடுகு - 1/2 டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.

 

    பரங்கிப்பூவை காம்பு நீக்கி, மஞ்சள் இதழ்களை மட்டும் எடுத்து, கழுவி வைக்கவும்.
    வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய், புளி, கழுவி வைத்த பூ இதழ்கள் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
    ஆறிய பின், உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.

Note:

சூடான சாதத்திற்கு நன்றாக இருக்கும்.