என்னென்ன தேவை?
பழுத்த அன்னாசிப்பழம் - 1,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய் - அரை மூடி,
சர்க்கரை - 300 கிராம்,
கட்டித் தயிர் - 2 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
கடுகு - 1 டீஸ்பூன்,
உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அன்னாசிப்பழத்தை தோல் சீவி, நடுவில் உள்ள தண்டை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அன்னாசிப்பழத்தை வேக வைக்கவும். வெந்து வாசனை பரவும் நேரத்தில் அரைத்து வைத்துள்ள கலவையையும் சர்க்கரையையும் சேர்க்கவும். பழம் குழையும் போது தயிரைப் போட்டு கிளறி இறக்கவும். இன்னொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இறக்கிய கலவையில் கொட்டினால் பைனாப்பிள் பச்சடி ரெடி.