Author Topic: ~ ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி ~  (Read 575 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227397
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி




தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது.

ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன்,சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது.

அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது.

மேலும் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின்,பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின்,வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் உள்ளது.

செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம்,இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.

இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.