மருத்துவ வரலாற்றிலே 5 வயதில் குழந்தை பெற்றெடுத்த லினா மெடினா
மருத்துவ வரலாற்றிலே மிக சிறிய வயதில் லினா மெடினா என்ற 5 வயது சிறுமி குழந்தையை பெற்றடுத்தார்.
பெரு நாட்டை சேர்ந்த லினா மெடினா 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். அந்த சிறுமி 5 வயது இருக்கும் போது வயிற்று வலி என்று அவளது தாய் விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தார்.
ஐந்து வயது சிறுமியை பரிசோத்தித்த மருத்துவர் அந்த சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.ஒன்றரை மாதம் கழித்து மே 14,1939 ஆம் ஆண்டு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது.
அந்த சிறுமிக்கு அரிதாக இருக்க கூடிய precocious puberty [சிறு வயதில் பருவமடைதல்]என்ற நிலை இருந்திருக்கிறது. பெரும்பாலும் சிறு வயதில் பருவமடைதல் 10 வயதில் தான் ஆரம்பிக்கும். ஆனால் இந்த சிறுமிக்கு 5 வயதிலே குழந்தையும் பிறந்து விட்டது.அந்த குழந்தைக்கு அப்பா யார் என்று அந்த சிறுமியால் சொல்ல தெரியவில்லை. அந்த காலத்திலே சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் இருந்திருக்கிறது.
லினா மெடினா 40 ஆண்டுகள் வரை உயிருடன் வாழ்ந்தார். கடைசி வரை அவளால் தன் குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியாமலே இறந்து போனார்.