Author Topic: ~ செடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இயற்கை உரங்கள் ~  (Read 1242 times)

Online MysteRy

செடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகவும் சிறந்த இயற்கை உரங்கள்

வீட்டில் தோட்டம் வைப்பது வீட்டிற்கு அழகை கொடுப்பது மட்டுமின்றி, அதைப் பார்க்கும் போது மனமும் நன்கு அமைதி பெறும். அதனால் பலர் வீட்டில் உள்ள தோட்டத்திற்கு பலவகையான பராமரிப்புக்களை மேற்கொள்ள அதிகம் செலவு செய்வார்கள். அதிலும் உரங்கள் வாங்குவதற்கு தான் அதிகம் செலவழிப்பார்கள். ஆனால் அவ்வாறு கஷ்டப்பட்டு தோட்டத்தைப் பராமரிப்பதற்கு பதிலாக, மிகவும் சிறந்த மற்றும் இயற்கையில் கிடைக்கும் உரங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனைப் பயன்படுத்தினால், செடிகள் நன்கு செழிப்போடு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வளரும்.

ஏனெனில் இயற்கை உரங்களில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, அந்த உரத்தினால் எந்த ஒரு ஆபத்தும் நிச்சயம் செடிகளுக்கு ஏற்படாது என்பதாலேயே தான். அதிலும் சரியான அளவில், சரியான நேரத்தில் உரங்களை பயன்படுத்தினால், செடிகள் ஆரோக்கியமாக இருப்பது உறுதி.

இங்கு ஒருசில இயற்கை உரங்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தோட்டத்தில் பயன்படுத்தி அழகான தோட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.


எப்சம் உப்பு



எப்சம் உப்பை நீரில் கரைத்து, தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு ஊற்றினால், எப்சம் உப்பில் உள்ள மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்கள் செடிகளுக்கு கிடைத்து, செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.

Online MysteRy

காபி பொடி



காடி பொடியும் ஒரு சிறந்த உரம் தான். அதிலும் இந்த காபி பொடியை ரோஜா செடிகளுக்கு தூவினால், காபி பொடியில் உள்ள நைட்ரஜன், மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் செடிகளுக்கு கிடைத்து, செடிகளும் நன்கு வளரும்.

Online MysteRy

முட்டை ஓடு



முட்டை ஓடும் ஒரு சூப்பரான இயற்கை உரமாகும். எனவே முட்டையின் ஓட்டை பொடி செய்து தூவினால், முட்டையில் உள்ள கால்சியம் கார்போனேட் செடிகளுக்கு கிடைக்கும்.

Online MysteRy

வினிகர்



4 டீஸ்பூன் வினிகரை தண்ணீரில் கலந்து, மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் ஊற்றி வந்தால், செடிகள் நன்கு வளரும்.

Online MysteRy

மீன் தொட்டி நீர்



மீன் தொட்டியில் உள்ள தண்ணீரில் நைட்ரஜன் மற்றும் செடிகளுக்கு தேவையான இதர சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆகவே இந்த நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு உறுதியுடன் வளரும்.

Online MysteRy

சாம்பல்



கட்டைகளை எரித்த சாம்பலும் மிகச்சிறந்த உரமாகும். ஏனெனில் சாம்பலில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் கார்போனேட் அதிக அளவில் உள்ளது.

Online MysteRy

காய்கறி குப்பைகள்



காய்கறிகளின் தோல்களை, செடிகளைச் சுற்றி போட்டால் செடிகள் நன்கு வளரும்.

Online MysteRy

ஓக் மர இலைகள்



ஓக் மர இலைகளை ஒரு வாளி தண்ணீரில் போட்டு, சூரிய வெப்பத்தில் தண்ணீர் நிறம் மாறும் வரை வைத்து, பின் அதனை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

Online MysteRy

களைகள்



தோட்டத்தில் செடிகளைச் சுற்றி வளரும் களைச் செடிகளை வேரோடு பிடுங்கி, அதனை உரங்களாக பயன்படுத்தலாம். இதனால் களைச்செடிகள் மங்கி, செடிகளின் வளர்ச்சிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

Online MysteRy

சாணம்



சாணத்தை விட சிறந்த உரம் எதுவும் இருக்க முடியாது. அதிலும் மாடு, கோழி அல்லது ஆடு போன்றவற்றின் சாணங்கள் செடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வலிமையோடு வளரச் செய்யும். குறிப்பாக இதனை விதைகளை விதைப்பதற்கு முன்பாகவும் பயன்படுத்தலாம். இதனால் மண்ணின் தன்மையானது தரமிக்கதாக இருக்கும்.