என்னென்ன தேவை?
மைதா மாவு, கடலை மாவு தலா - 1 கப்,
நெய் - அரை கப்,
சர்க்கரை - 2 கப், ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை.
பொடித்த முந்திரி சிறிது.
எப்படிச் செய்வது?
அடி கனமான பாத்திரத்தில் நெய் காய வைத்து அதில் மைதா, கடலை மாவு கொட்டி பொன்னிறமாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது முழுகும் அளவு தண்ணீர் ஊற்றி கெட்டிப் பாகு பதத்தில் வரும்போது இறக்கி நெய்யில் வறுத்த மாவு கலவையைக் கொட்டி, ஏலக்காய் தூள், சேர்த்து கரண்டியால் வேகமாக சீராக கிளறவும். மாவு கெட்டியானதும் உடனே நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி சமன்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்.
குறிப்பு: இந்த சோன் பர்ஃபி செய்யும்போது பாகு கெட்டியானதும் உடனே கீழே இறக்கி, மாவு கொட்டி கிளறுவதை சிறிது வேகமாக செய்ய வேண்டும்.