Author Topic: மணிப்புட்டு  (Read 534 times)

Offline kanmani

மணிப்புட்டு
« on: July 27, 2013, 11:55:27 PM »

    பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - ஒரு கப்
    தேங்காய் துருவல் - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு

 

 
   

அரிசி மாவுடன் உப்பு சேர்த்து கொதிக்கும் நீர் ஊற்றி கெட்டியாக பிசையவும். (தண்ணீருடன் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிட்டு மாவில் ஊற்றி பிசைந்தால் மேலும் சுவை கூடும்).
   

பிசைந்த மாவை சிறு மணிகள் போல் உருட்டி வைக்ககவும்.
   

புட்டுக் குழாயில் சிறிது தேங்காய் துருவல் போட்டு, அதன்மேல் சிறிது புட்டு மணிகளைப் போடவும். பின்னர் மீண்டும் தேங்காய் துருவல், புட்டு மணிகள் என மாற்றி மாற்றி புட்டுக் குழாயை நிரப்பவும். (அதிக அளவில் செய்யும் போது சிறு உருண்டைகளாக்குவது சிரமமாக இருக்கும். சேவை நாழி அல்லது இடியாப்ப அச்சிலிட்டு நேரடியாக புட்டுக் குழாயில் பிழிந்தும் செய்யலாம். புட்டுக் குழாய் இல்லையெனில் இட்லி தட்டில் வைத்து தேங்காய் துருவல் கலந்து புட்டு மணிகளைப் பரவலாக வைத்து வேக வைக்கலாம்).
   

நிரப்பிய பின்பு ஆவியில் வேக வைக்கவும். புட்டுக் குழாயின் மேல் நீராவி வெளிவந்ததும் 5 நிமிடங்களில் எடுத்துவிடலாம். பதமாக வெந்திருக்கும்.
   

சுவையான மணிப்புட்டு தயார். காரமான மீன் குழம்பு அல்லது சிக்கன் குழம்பு பெஸ்ட் காம்பினேஷன். தேங்காய்ப் பாலும், சீனியும் கூட சுவையாக இருக்கும்.

 

பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு என்பது பச்சரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து ஈரம் போக துணியில் போட்டு உலர்த்தி, மிக்ஸியில் மாவாக்கி, சலித்து அதை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து ஆறவைத்த மாவு.